இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

21 நவம்பர், 2009

ஏழாங்காய் விளையாட்டு


சிறுமியர் ஆடுவது. ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால் இப்பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு மற்றகாய்களைச் சிதறவிட்டு கையிலிருக்கும் காயை மேலே விட்டு கீழிருக்கும் காயை எடுத்தபடி மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.
பாடல்: ஆலெல பொறுக்கி
அரசெல பொறுக்கி
கிண்ணம் பொறுக்கி
கீரிபுள்ள தாச்சி
தாச்சின்னா தாச்சி
மதுர மீனாட்சி.
பயன்கள்: கை,வாய், கண் ஆகிய முப்புலன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் ஆற்றல் வளர்கிறது

2 கருத்துகள்:

 1. ஐயா! தங்களின் மண் கவுச்சி எனது குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. நாங்கள் செட்டிநாட்டு கிராமத்தில்(கண்டனூர்-மத்திய அமைச்சர்.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) பிறந்தவர்கள்.
  நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணாமூச்சி, சில்லி, ஏழாங்காய்,குலை குலையாய் முந்திரிக்காய் இதெல்லாம் நாங்கள் விளையாடியதுண்டு.ஏழாங்காய் எங்கள் பக்கம் சொட்டாங்காய்
  சில்லி விளையாட்டு - மாங்கொட்டை.
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 2. மறக்க முடியாத விளையாட்டுகள்.தங்களின் பதிவுகள் யாவற்றையும் பார்த்ததும் பழைய நினைவுகள் பசுமையாக!

  (சாந்தியின் காந்தியக்கிராமங்கள் வழி இங்கு வந்தேன் நன்றி.)

  பதிலளிநீக்கு