இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

13 மார்ச், 2011

தியாக ரமேஷ்சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர் கழகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடும்படியான இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் இவமைப்பிற்கான செயலவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். அண்மையில் கூடிய 17 ஆம் செயற்குழு தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் தியாக ரமேஷ் அவர்களை செயலவை உறுப்பினராகத் தேர்வுசெய்துள்ளது.
தியாக ரமேஷ் சிங்கப்பூரில் உள்ள ரோட்டரி பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். ‘அப்படியே இருந்திருக்கலாம்’ என்ற கவிதை நூலின் ஆசிரியர். ‘நினைவுப் பருக்கைகள்’ என்னும் இவரது கவிதை நூல் அடுத்த மாதம் சிங்கப்பூரில் வெளியாக உள்ளது.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் தமிழ் மாத இதழின் சிங்கப்பூர் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து பங்காற்றிவரும் இவரின் பொறுப்பு மிக்க செயல்பாடினைக் கருத்தில் கொண்டு இவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர் தியாக ரமேஷ் கடலூர் மாவட்டம் கணபதி குறிச்சி கிராமத்தில் பிறந்தவர். இவரின் மனைவி குழந்தைகள் விருத்தாசலத்தில் வசிக்கின்றனர்.
திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கவிஞருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.