மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை விளையாடுவர். சிறு குழியில் புள் எனப்படும் சிறு மரத்துண்டினை வைத்து கோட்டியால் கெந்திவிட்டு புள் விழுந்த இடத்திற்குச் சென்று அப்புள்ளை கோட்டியால் தட்டி எழுப்பி அடித்து விட எங்கு போய் வாழுகிறதோ அங்கிருந்து மீண்டும் மீண்டும் அது போல் செய்து இறுதியில் எதிரணியினர் புள் கிடந்த இடத்திலிருந்து கேலியான குறிப்பொலி எழுப்பியபடி ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். முதலில் புள்ளைக் கெந்தும் போது எதிரணியினர் புள்ளைப் பிடித்துவிட்டால் கெந்தியவர் ஆட்டமிழப்பார்.
பயன்கள்: ஊருடன் ஒத்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்புபு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
பயன்கள்: ஊருடன் ஒத்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்புபு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
நம் நாட்டில் அனைத்துமே வியாபாரமாகிப்போனதால் இதுபோன்ற மக்கள் விளையாட்டுகள் அழியும் நிலையிலேயே உள்ளன. பதிவு விரிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குதமிழர் விளையாட்டுக்கள் பற்றிய உங்கள் கட்டுரைகளை தமிழ் விக்கியில் இடுவதைப் பரிசீலிக்கவும். நன்றி.
பதிலளிநீக்கு