இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 ஏப்ரல், 2010

சரணா


சரணா சரணா, சரணாத்தி, கிளித்தட்டு என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் ஆட்டம். செவ்வக வடிவில் நிலத்தில் கோடு கிழித்து அதனை நீள வாக்கில் இரண்டாகப் பிரித்து ஒரு அணியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறுக்குக் கோடுகளை அமைத்துக்கொள்வர். உத்தி பிரிந்து ஒரு அணியினர் கோடுகளில் நின்று கொள்ள எதிரணியினர் நிற்பவர்களிடம் அடி படாமல் குறுக்குக் கோடுகளைக் கடந்து சென்று உப்பெடுத்து வரவேண்டும். அணித் தலைவனுக்குக் கிளி என்று பெயர் அவன் முதல் கோட்டில் நிற்க பிற உறுப்பினர்கள் மற்ற கோடுகளில் நிற்பர். இலங்கையிலும் தமிழர்களிடையே கிளித்தட்டு ஆடும் பழக்கம் உள்ளது. கிளி சரணா, உப்பு சரணா என இரு வகை உண்டு. முல்லை நிலத்தில் தோன்றியது கிளி சரணா, நெய்தல் நிலத்தில் தோன்றியது உப்பு சரணா எனக் கருதப்படுகிறது.பயன்: தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் இழுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் பண்பாட்டினை சிறுவர்களுக்குக் கற்றுத் தருகிறது.

1 கருத்து:

  1. அண்ணனுக்கு, தம்பி வீரமணி. விளையாட்டுகளை படங்களாக பார்க்கும்பொழுது, இந்த களத்தில் நான் சேகரித்து வைத்திருக்கும் என் முல்லைநிலத்தை விரைவாக படமாக எடுக்க வேண்டும்போல இருக்கிறது...

    உங்கள் படைப்புகள் எனக்கு நிறைய விஷயங்களை நினைவுப்படுத்திகொண்டே இருக்கிறது, அது என் திரைக்கதைக்கு பெரிய உதவியாக இருக்கிறது.

    நன்றி

    நிறைய அன்புடன்
    வீரமணி

    பதிலளிநீக்கு