அழும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது உண்டு. குழந்தையை காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய உறுப்பான அம்புலி குழந்தையின் 15 ஆம் மாதத்திற்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையோடு விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு.நாட்டுப்புற அம்புலியில் குழந்தையை படத்திலுள்ளவாறு அமர்த்தி கீழ்க்கண்டுள்ள பாடலைப்பாடி விளையாட்டு காட்டுவர்.பெரியவர் பாடலைப்பாட குழந்தையும் பின்பற்றிக்கூறுவதாக விளையாட்டு தொடரும்.
அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க
ஏன் குச்சி?
குழி நோண்ட
ஏன் குழி?
பணம் பொதைக்க
ஏன் பணம்?
மாடு வாங்க
ஏன் மாடு?
சாணி போட
ஏன் சாணி?
ஊடு மொழுவ
ஏன் ஊடு?
பிள்ளைகள் வளர
ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...
கோரப்பாயில... கொஞ்சி வெளையாட...
பயன்கள்: இவிளையாட்டின் மூலம் குழந்தைகள் கேட்கும் திறனும் பேசும் திறனும் அதிகரிக்கிறது. நமது கிராமப்புற பண்பாடு பழக்கவழக்கங்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ள உதவுகிறது.
இப்போயெல்லாம் நாட்டுபுரங்களில்
பதிலளிநீக்குஉறவுகல பார்க்கமுடியல அண்ணா
பாட்டுகளையும் கேட்க்க முடியல அண்ணா
இது மாறுமா இல்ல மனசு பொருக்காம போகுமா
நிச்சயம் மாறும் திருமுருகன் நம் குழந்தைகளை வீதியில் விளையாட அனுமதிக்கும்போது
பதிலளிநீக்கு