இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

1 மார்ச், 2017

அன்னப்பூ விமர்சனம்


இரத்தின புகழேந்தி அவர்கள் எழுதிய "அன்னப்பூ" சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை இன்று வாசிக்க நேர்ந்தது. முகநூலில் அவ்வப்போது இவர் பதிவுகள் வாசித்தது உண்டு. அந்த ஓர் அறிமுகம்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க தூண்டியது. ஆனால், அந்தப் புத்தகத்தை வாசித்தபோதுதான் இது அவரின் ஒன்பதாவது புத்தகம் என்று தெரிந்தது. 

இந்த "அன்னப்பூ" புத்தகம் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 
ஒரு கதையில் சாயல் மன்றொன்றில் இல்லை. வேறு வேறு கதைக்களம்; வேறு வேறு உணர்வுகள் என சில மணி 
நேரத்தில் நாம் படித்து பெறக்கூடிய பேரனுபவம்.

அதில் இரண்டாவது வரும் "சுழியான்" கதையை வாசித்தபோது வருடாவருடம் தீபாவளிக்கு கோவையில் சாப்பிடும் சுழியான் சுவை மனதில் இருந்து நாவிற்கு எட்டிப் பார்த்தது.

மூன்றாவதாய் வாசித்த "தண்ணீர்" கதையில் வரும் தாகம் என் தொண்டையிலும் வருடியது. கதையை வாசித்து முடித்ததும் பக்கத்தில் இருந்த டம்ளர் தண்ணீரை பருகியபோது ஒருவித புதிய சுவை, தண்ணீரில்.

"செல்ஃபி பாரதி" கதை வாசித்தபோது என் மகள்கள் இருவரும் வாசித்து சிரித்து தள்ளினர். சிறுபிள்ளைகளும் வாசிக்கும்படி எளிய எழுத்து நடை. யோசித்துப் பார்த்தால் சின்ன சின்ன சம்பவங்கள்தான் முழுக்கதையையும் வடிவமைக்கிறது.

எழுத்தாளரின் கற்பனைத் திறனும், அதை எளிமையான கதைகளாய் அமைத்து கொடுத்த விதமும் உணரும்போது, "மண் மனம் மாறாமல் ஈர எழுத்துக்கள் கைதையெங்கிலும் விரவிக் கிடக்கின்றன" என்ற பதிப்பாளர் ஆர்.தேவகி அவர்களின் வரிகள் மிக பொருத்தமாக தெரிந்தது.


நன்றி: அருண்பத்மஜா
https://www.facebook.com/arun.padmaja1

நூலை இணைய வழியாகப்பெற
http://www1.marinabooks.com/detailed?id=4%208312

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக