இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

9 ஜூன், 2013

மரத்தை வளர்த்தவன்பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் சாரண மாணவர்களைக் கொண்டு நட்ட மரம்... இன்று பூத்துக்குலுங்குவதைப் பார்க்க மனத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்குகிறது.

இதைக்கூறும்போது நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

மரத்தை வளர்த்தவன்

மரம் ஒன்றை நட்டு
தண்ணீர் ஊற்றினான்
ஒருவன்

அது வளர்ந்து
தழைத்து
வருவோர்க்கெல்லாம்
நிழலைத் தந்தது

மரத்தைத் தான்தான்
வளர்த்ததாய்ப் பீற்றிக்கொண்டவனுக்கு
நிழலுக்கு ஒதுங்கியவர்கள்
வழங்கிச்சென்றனர்
மகராசன் பட்டத்தை

எதுவும் பேச இயலாமல்
நின்று கொண்டிருந்தது
மரம்.

(இடம் : சலீம் அலி பூங்கா, தங்கம் நகர், விருத்தாசலம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக