இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

30 ஜனவரி, 2017

பேராசிரியர் சு.அமிர்தலிங்கம்




அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடியில் பிறந்தவர்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களிடம் தமிழில் இளங்கலையும்(1969-72) முதுகலையும்(1972-74) பயின்றவர்.
சென்னைப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் ந.சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் நெ.து.சுந்தரவடிவேல் நூல்களில் ஆய்வியல் நிறைஞர்  (1976-77)  பட்டம் பெற்றார். அதன்பிறகு தமிழறிஞர் முனைவர் பொற்கோ அவர்களின் மேற்பார்வையில் வள்ளலார் ஆளுமை உருவாக்கமும் பங்களிப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு உடையவர். 1978 முதல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். இவரின் மாணவர்கள் பலர் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் சங்கப்போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
இன்று(30.01.2017) அதிகாலை இயற்கை எய்தினார்
இவரின் நூல்கள்:
1.வள்ளலாரின் அணுகுமுறைகள்
2.வள்ளலார் வழங்கிய கொடை
3.சங்க இலக்கிய களஞ்சியம்( தமிழக அரசின் பரிசுபெற்ற நூல்)
3.வள்ளலாரின் ஆளுமை உருவாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக