சிற்றூர்களில் சிறுவர்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா? இப்படி ஒரு கேள்வியை அவள்விகடன் அலுவலகத்திலிருந்து கேட்டார் லட்சுமிகிருபா. கிராமத்து விளையாட்டுகள் நூலில் எழுதியிருக்கிறேன் என்று கூறியபோதும் அவர் விடவில்லை. குறிப்பாக விளையாட்டுகளின் பெயர்களைக் கூறி அவ்விளையாட்டால் என்ன பயன் கிடைக்கிறது என்று சுருக்கமாக ஹைக்கூ போலக் கூறுங்கள் என்று கேட்க சிந்தித்தபோது தோன்றியவை இவை. இவற்றையும் மீறி விளையாட்டுகள் எண்ணற்ற பயன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. பல்லாங்குழி: பொருள் ஈட்டும் குணம்,நினைவாற்றலை வளர்த்தல்,பிறருக்கு உதவுதல்.
காயே கடுப்பங்காய்:குழு மனப்பான்மை, உடல் மொழி அறிதல், இடர் மேலாண்மை ஆகிய பயிற்சிகளை வழங்குகிறது.
காற்றாடி:இயற்கை ஆற்றல், தொழில் நுட்ப ஆற்றல் ஆகியவற்றை சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுதல்.
கண்ணாமூச்சி:கண்டறியும் திறனை வளர்க்கிறது, செவிப்புலனைக்கூர்மையாக்குகிறது, காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற பண்பை வளர்க்கிறது.
கல்பாரி: சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகிறது,எதிரிகளிடமிருந்து தப்பிக்கக்கற்றுக்கொள்ளுதல்
நொண்டி விளையாட்டு:இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு தன்னம்பிக்கையைத்தருகிறது
மேலும் விளையாட்டுகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு படிக்க விகடன் வெளியிட்டுள்ள கிராமத்து விளையாட்டுகள் நூலை.நன்றி: அவள் விகடன்.
இன்னும் விரிவாகக்கூட எழுதியிருக்கலாம். ஆய்வுக்குரிய பொருள் இது.
பதிலளிநீக்கு- பொன்.வாசுதேவன்
அருமை. விளையாட்டுக்கள் சமூக வாழ்கை, வழக்கிலிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும். சில விளையாட்டுக்கள் போர்களை நியாபகப்படுத்துகின்றன. சில விளயாட்டுக்கள் வியாபாரத்தை. மிக சிறப்பான, ஆய்வுக்குரிய பொருள்.
பதிலளிநீக்குமிகவும் நன்றாகவுள்ளது நண்பரே...
பதிலளிநீக்குபழந்தமிழர் விளையாட்டுக்கள் என்னும் எனது இந்த இடுகையைப் பார்த்தீர்களா..
http://gunathamizh.blogspot.com/2009/06/36.html
அழகான நிழற்படங்களுடன் விளக்கம் மிகவும் நன்றாகாவுள்ளது நண்பரே...
பதிலளிநீக்குவலைப்பதிவுகளுள் தங்கள் இடுகையை இன்று தான் பார்த்தேன்..
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி...
மிக அருமையான பதிவு .... வாழ்த்துகள்....அப்படியே ஐந்து கல் வைத்து விளாயாடும் விளையாட்டு போன்றவை குறித்தும் எழுதுங்கள்.
பதிலளிநீக்குதியாக ரமேஷ்ன் உதவியுடன் உங்கள் வலைத்தளம் கண்டேன்... வியந்தேன் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவிளையாட்டாய்
பதிலளிநீக்குஒரு வினையாடியுள்ளீர்கள் !
வாழ்த்துகள் நண்பரே!
தமிழ் இயலன்
சிரப்பு......
பதிலளிநீக்கு