நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து ஆடும் விளையாட்டு இது. பகல் இரவு என இரு பொழுதுகளிலும் ஆடுவர். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் குனிந்து நிற்பவரின் முதுகில் கை வைத்து ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குத் தாண்ட வேண்டும். தாண்டும்போது தாண்டுபவரின் கால்கள் குனிந்திருப்பவரின் மீது படக்கூடாது, பட்டால் ஆட்டமிழப்பர்.ஆட்டத்தில் பாடப்படும் பாடல்: ஆபியம்... மணியாபியம்... கிருணாபியம் நாகனார் மண்ணைத்தொடு ராஜா சூத்துல ஒத குடு.பயன்கள்: எச்சரிக்கை உணர்வை வளர்க்கும், எதையும் தாங்குகிற வலிமையைத் தரும்.
15 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதிர்காலத் தலைமுறையினர் இது போன்ற இடுகைகளைப் பார்த்துதான் இது போன்ற விளையாடல்களை அறிந்து கொள்ளவேண்டும்...
பதிலளிநீக்குஇந்த விளையாட்டை நாங்கள் பச்ச குதிரை என்ற பெயரில் விளையாடியிருக்கிறோம்.
பதிலளிநீக்கு