இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

18 செப்டம்பர், 2010

அவர்களுஇவர்களும் இசைத்தட்டு அறிமுக விழா







கேப்டன் சி. காமராஜ் தயாரிப்பில் நண்பர் வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் இசைத்தட்டு அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இராம நாராயணன் தலைமையில் நடைபெறும் விழாவில் தங்கர்பச்சான், தேவயானி, வி.சி.குகநாதன், கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

சிவசக்தி பாண்டியன் இசைத்தட்டை வெளியிட அகத்தியன் பெற்றுக்கொள்கிறார்.
விழாவைப் போலவே திரைப்படமும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

இடம் : ஆந்திர மகிழ சபை, விசயராகவா சாலை,
தி.நகர், சென்னை - 17.

நாள் : 18.09.2010 - மாலை 5 மணி.

14 ஏப்ரல், 2010

சரணா


சரணா சரணா, சரணாத்தி, கிளித்தட்டு என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் ஆட்டம். செவ்வக வடிவில் நிலத்தில் கோடு கிழித்து அதனை நீள வாக்கில் இரண்டாகப் பிரித்து ஒரு அணியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறுக்குக் கோடுகளை அமைத்துக்கொள்வர். உத்தி பிரிந்து ஒரு அணியினர் கோடுகளில் நின்று கொள்ள எதிரணியினர் நிற்பவர்களிடம் அடி படாமல் குறுக்குக் கோடுகளைக் கடந்து சென்று உப்பெடுத்து வரவேண்டும். அணித் தலைவனுக்குக் கிளி என்று பெயர் அவன் முதல் கோட்டில் நிற்க பிற உறுப்பினர்கள் மற்ற கோடுகளில் நிற்பர். இலங்கையிலும் தமிழர்களிடையே கிளித்தட்டு ஆடும் பழக்கம் உள்ளது. கிளி சரணா, உப்பு சரணா என இரு வகை உண்டு. முல்லை நிலத்தில் தோன்றியது கிளி சரணா, நெய்தல் நிலத்தில் தோன்றியது உப்பு சரணா எனக் கருதப்படுகிறது.பயன்: தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் இழுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் பண்பாட்டினை சிறுவர்களுக்குக் கற்றுத் தருகிறது.

17 மார்ச், 2010

கோட்டிப்புள்


மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை விளையாடுவர். சிறு குழியில் புள் எனப்படும் சிறு மரத்துண்டினை வைத்து கோட்டியால் கெந்திவிட்டு புள் விழுந்த இடத்திற்குச் சென்று அப்புள்ளை கோட்டியால் தட்டி எழுப்பி அடித்து விட எங்கு போய் வாழுகிறதோ அங்கிருந்து மீண்டும் மீண்டும் அது போல் செய்து இறுதியில் எதிரணியினர் புள் கிடந்த இடத்திலிருந்து கேலியான குறிப்பொலி எழுப்பியபடி ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். முதலில் புள்ளைக் கெந்தும் போது எதிரணியினர் புள்ளைப் பிடித்துவிட்டால் கெந்தியவர் ஆட்டமிழப்பார்.
பயன்கள்: ஊருடன் ஒத்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்புபு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

11 பிப்ரவரி, 2010

பம்பரம்




சிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,காட்டுக்குத்து எனக்குறிப்பிடுவர். வட்டத்துக்குள் பமபரத்தை வைத்து ஆடுவது வல்லா. இரு எல்லைக் கோடுகள் வரைந்து அதற்குள் பம்பரத்தை விட்டு கைகளில் ஏந்தி ஆடுவது காட்டுக் குத்து எனப்படும். பமபரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம், கந்தபுரிணம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன.பயன்கள்: தனித்திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.

18 ஜனவரி, 2010

அம்பால் விளையாட்டு



7 ஆம் எண் வடிவக் குச்சியைக்கொண்டு ஆடும் ஆட்டம். ஒருவன் இரு கைகளாலும் குச்சியை உயர்த்திப் பிடித்துக்கொள்ள மற்றொரு சிறுவன் அதனைத் தள்ளிவிட கீழே விழுந்து கிடக்கும் அம்பால் குச்சியை மற்ற சிறுவர்கள் முடிந்தவரைத் தள்ளிச்செல்வதே இவ்வாட்டத்தின் முக்கி அம்சம். தன் குச்சியைத் தள்ளிச் செல்பவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்யவேண்டும். ஆட்டமிழப்பவர் தன் குச்சியை உயர்த்திப் பிடித்து நிற்க மீண்டும் மீண்டும் தொடரும். அதற்கு முன்பு கீழே கிடக்கும் குச்சியை அதற்குரியவன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு ஓடி வரவேண்டும். அப்போது அவனுக்குப் பின்னால் வரும் சிறுவர்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுவர்.
எங்க வீட்டு நாய் தெரு பொறுக்கப் போச்சுகல்லால அடிச்சேன்காலொடிஞ்சி போச்சு
ஆட்டத்தின் பயன்:
சிறுவர்களிடம் மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

29 நவம்பர், 2009

கண்ணாமூச்சி



சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும்.

உரையாடல்: கண்ணாமூச்சி காதடைப்பு

உங்க வீட்டுல என்னா சோறு?

நெல்லு சோறு

ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?

எறும்பு உழுந்துது

எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா?

எடுத்துட்டு சாப்பிட்டேன்

காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி,

ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
கண்பொத்தி ஆடும் மரபு சங்ககாலந்தொட்டே தமிழர்களிடமிருந்திருப்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்துகின்றன.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! (ஐங்குறுநூறு)கண் புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன...(அகநாநூறு)

28 நவம்பர், 2009

குலை குலையா முந்திரிக்காய்



சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் ஆடும் ஆட்டம். விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் வட்டவடிவில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் கையில் வைத்திருக்கும் துணியைச் சுழற்றிக்கொண்டு வட்டத்தைச் சுற்றி பாட்டு பாடியபடி ஓடிவரும்போது அமர்ந்திருப்போரில் யாரேனும் ஒருவர் பின்னே அத்துணியை போட்டுவிட்டு ஓடுவார். துணி யாருக்குப்பின்னால் கிடக்கிறதோ அவர் எழுந்து ஓடி துணி போட்டவரைப் பிடிக்கவேண்டும் இல்லையேல். இவர் யாரேனும் ஒருவர் பின்னால் துணியைப்போட ஆட்டம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும்.
பாடல்: கொல கொலயா முந்திரக்காய்

நரிய நரிய சுத்தி வா

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.