இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

9 ஜூன், 2013

மரத்தை வளர்த்தவன்



பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் சாரண மாணவர்களைக் கொண்டு நட்ட மரம்... இன்று பூத்துக்குலுங்குவதைப் பார்க்க மனத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்குகிறது.

இதைக்கூறும்போது நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

மரத்தை வளர்த்தவன்

மரம் ஒன்றை நட்டு
தண்ணீர் ஊற்றினான்
ஒருவன்

அது வளர்ந்து
தழைத்து
வருவோர்க்கெல்லாம்
நிழலைத் தந்தது

மரத்தைத் தான்தான்
வளர்த்ததாய்ப் பீற்றிக்கொண்டவனுக்கு
நிழலுக்கு ஒதுங்கியவர்கள்
வழங்கிச்சென்றனர்
மகராசன் பட்டத்தை

எதுவும் பேச இயலாமல்
நின்று கொண்டிருந்தது
மரம்.

(இடம் : சலீம் அலி பூங்கா, தங்கம் நகர், விருத்தாசலம்.)

14 மே, 2013

சபாநாயகம் 80



அன்புடையீர் வணக்கம்,
           எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களுக்கு 80 வயது நிறைவடைகிறது.அதனைச் சிறப்பாக்க் கொண்டாடும் விதமாக எழுத்தாளர்கள் நண்பர்கள், அவரிடம் பயின்ற மாணவர்கள் ஒருங்கிணைந்து விருத்தாசலத்தில்  விழா நடத்த வும், அந்த             விழாவில் சிறப்பு மலர்ஒன்று வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
 விழாகுறித்தும்,மலர் குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறோம். அம் மலரில் இடம்பெறுவதற்கு தங்களின் கட்டுரையினை அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.
 கட்டுரைகள் வே.சபாநாயகம் அவர்களின் இலக்கிய பங்களிப்பு
 குறித்தும்அவரது படைப்புகள் குறித்த திறனாய்வாகவும்  அமையலாம்.                                                 அவரைப்பற்றிய நினைவுக்குறிப்புகள்,அரிய செய்திகள், நிழற்படங்களையும் அனுப்பிட வேண்டுகிறோம்படைப்புகளை 15/06/2013 க்குள் அனுப்பி மலர் தயாரிக்கவும்         விழா சிறப்பாக நடைபெறவும்  ஒத்துழைக்க வேண்டுகிறோம்விழா தொடர்பாக தங்களைத் தொடர்புகொள்வதற்கு தங்களின் அலைபேசி எண்ணை விழாக்குழுவிற்கு வழங்கிட
வேண்டுகிறோம். மின்னிஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர் ஒருங்குறி (Unicode Font) எழுத்துருவில்அனுப்பவும்.
                                                                                                            தொடர்பு முகவரி
                                                                                                            இரத்தின புகழேந்தி
                                                                                                            18, தங்கம் நகர்
                                                                                                            பூதாமூர்
                                                                                                            விருத்தாசலம் – 606 001.
                                                                                                                                    
                                                                                                               pugazhvdm@gmail.com
                                                                            பேசி: 9942646942, 9942347079, 948848519
தலைவர்
கவிஞர்த.பழமலை

செயலாளர்
கவிஞர் பல்லவிகுமார்

விழாக்குழு
முனைவர் சு.அமிர்தலிங்கம்
கவிஞர் பட்டி செங்குட்டுவன்
கவிஞர் கரிகாலன்
எழுத்தாளர் இமையம்
முனைவர் இரத்தினபுகழேந்தி
வழக்கறிஞர் மெய்கண்டநாதன்
கவிஞர் ஆறு.இளங்கோவன்
கவிஞர் சுந்தரபாண்டியன்
கவிஞர் இளந்திரையன்
எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன்
எழுத்தாளர் எஸ்ஸார்சி
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி
ஆர்.கிருஷ்ணமூர்த்தி
எம்.இராமலிங்கம்
முனைவர் ஜெ.விருத்தகிரி
சு.சம்பந்தம் மணியம் பதிப்பகம்
ரெங்கப்பிள்ளை செய்தியாளர்
.ரமேஷ்பாபு
கவிஞர் கண்மணிகுணசேகரன்
பூ.ராசேந்திரன்
தீ.கோ.நாராயணசாமி
பிரவிண்குமார்
கவிஞர் செ.அமிர்தராஜ்
அ.அக்பர்
அ.செந்தில்குமார்
பி.மதியழகன்
மலர் வெளியீடு
நரி.அரி.கிருஷ்ணமூர்த்தி
அகிலா பதிப்பகம்
கழுகு எம்.இராமலிங்கம்
நிவேதிதா பதிப்பகம்


2 டிசம்பர், 2012

நாட்டுப்புற இலக்கியம் அறிவோம்






நாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்ற தலைப்பில் சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் தினம் ஒரு தகவல் தருகிறேன்.
ஒவ்வொரு நாளும் என்ன  தகவல் என்ற அட்டவணை கீழே உள்ளது இயலுமெனில் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கேளுங்கள் 3 நிமிடம் மட்டுமே அழைப்புக்கட்டணம் சாதாரணக்கட்டணமே.

தொடர்பு எண் - 044-66802905

1.12.12 - இலக்கியங்களின் தாய் - நாட்டுப்புற இலக்கியமே இலக்கியங்களின் தாய் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கேட்கலாம்.

2.12.12 - வாய்மொழி இலக்கியம் - வாய்மொழி இலக்கியம் எவ்வாறு தோன்றி எப்படி பரவுகிறது என்பதைக்கேளுங்கள்.

3.12.12 - நாட்டுப்புறப்பாடல்கள் - இதில் எத்தனை வகை நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன அவை எப்போது பாடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

4.12.12 - தாலாட்டு - தலாட்டுப்பாடல் கேட்காதவர் உண்டா? ஆராரோ ஆரிராரோ.. என்ற மந்திரச்சொல்லின் மகிமையை ஒரு பாடலோடு கேட்கலாம்.

5.12.12 -விளையாட்டுப்பாடல்கள் - எத்தனையோ விளையாட்டுப்பாடல்கள் இந்த மண்ணில் புதைந்து கிடக்கின்றன அத்தனையும் நம் குழந்தைகளின் சொத்துகள்.கேளுங்கள்...

6.12.12 - தொழில் பாடல்கள் - கம்பரே வியந்த ஒரு தொழில்பாடல்தான் ஏற்றப்படல் கம்பர் எப்படி ஏமாந்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

7.12.12 - நடவுப்பாடல் - வேளாண்தொழிலின் முக்கிய நிகழ்வு நெல் நடவு அப்போது பாடப்படும் பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் கேட்டுப்பாருங்கள்.

8.12.12 - கொண்டாட்டப்பாடல்கள் - மக்களிடம் எத்தனைக் கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்களிடம் பாட்டு உண்டு பொங்கல் கொண்டாடும் தமிழர்களிடம் என்ன பாட்டு உண்டெனத்தெரிந்துகொள்ளக் கேளுங்கள்.

9.12.12 - நாட்டுப்புறக் கதைகள் - டண் டண் டண் டமுக்கு ஆளுக்கு ரெண்டு அமுக்கு இந்த ஆம கத கேட்டிருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி கேட்டுப்பாருங்க.

10.12.12 - பழமொழிகள் - தமிழக நாட்டுப்புறங்களில் எத்தனை பழமொழிகள் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு பழமொழி கந்தலாட்டுக்காரன் எந்த ரோட்டுல போறான் விருத்தாலத்து ரோட்டுல விரு விருன்னு போறான். இதுபோல் மண் மணம் கமழும் பழமொழிகளைக் கேட்கலாம்.

11.12.12 - விடுகதைகள் - சிற்றூர் மக்களின் பொழுது போக்கு என்றாலும் நாட்டுப்புற விடுகதைகளுக்கு ஒரு புதிர்த்தன்மை உண்டு காயும் கோணக்கா கொள்ளுடா மச்சான் கொள்ளு வெடியும் வெடிச்சுட்டேன் சொல்லுடா மச்சான் சொல்லு. கண்டுபிடித்து விட்டீர்களா விடையை?

12.12.12 - நகைப்புகள் - பத்திரிக்கைகளில் நகைச்சுவைத்துணுக்குகள் படித்திருப்பீர்கள் நாட்டுப்புற நகைப்புகளைக் கேட்டதுண்டா கேட்டுப்பாருங்கள்.

13.12.12 - சிறுவர் வழக்காறுகள் - நாக்க நீட்டாதே வாக்கப்படதே குண்டாஞ்சட்டியில குட்டி போடதே . இது என்ன பாடல் தெரிந்து கொள்ளவேண்டுமா கேளுங்கள்.

14.12.12 - கதைப்பாடல்கள் - பல கதைப்பாடல்கள் ஓலைச்சுவடிகளிலேயே முடங்கிக்கிடக்கின்றன. இவை எந்த சூழலில் பயன்படும் கெளுங்கள்.

15.12.12 - நாட்டுப்புற இலக்கியங்களின் பயன்கள் - நாட்டுப்புற இலக்கியங்களால் ஏதேனும் பயன்கள் உண்டா? விடுதலைப்போராட்டம் முதல் விளையாட்டுப்போட்டிகள் வரை அவற்றின் பயன்பாடுகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : சுட்டிவிகடன்

22 ஜூன், 2012

தில்லையாடி சரஸ்வதி

தில்லையாடி வள்ளியம்மையை நமக்குத் தெரியும் ஆனால் அவரை காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தியவரைத் தெரியுமா. அவர் தில்லையாடி வேதியப்பிள்ளை. அவரின் 82 வயது மகள் திருமதி சரஸ்வதி கூறுகிறார்...
வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரின் குடும்பத்திற்கு உதவியதும் இவரின் தந்தைதானாம்.





21 ஜூன், 2012

என் விகடனில் மண்கவுச்சி


என் விகடனில் என் வலைப்பூ பற்றி அறிமுகம் .
இந்த வாரம் ஆனந்தவிகடன், என் விகடன் வலையோசை பகுதியில் மண்கவுச்சி பற்றி அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நன்றி : ஆனந்தவிகடன்

17 ஜூன், 2012

விருத்தாசலம் பெயர்மாற்றம் கோரிக்கை




விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மாற்றக்கோரி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவும், ஆதாரங்களும் கொடுத்தோம். உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குழந்தை தமிழரசன் வந்தார். அவரிடம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். செய்தி வெளியிட்ட தினமணி, தினமலர் இதழ்களுக்கு நன்றி

18 ஜனவரி, 2012

புதிய கூரைப் பேட்டை




நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பல சிற்றூர்களை விழுங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று கூரைப்பேட்டை. அந்த ஊரை காமராசர் முதல்வராக இருந்த போது மீண்டும் புதிய கூரைப்பேட்டையாக மறு கட்டமைப்பு செய்துள்ளனர் அந்த ஊர் தறப்பு விழா முதல்வர் காமராசர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது.
17.01.2012 காணும் பொங்கலன்று அண்ணன் அறிவுமதி அழைக்க கூரைப்பேட்டை திரு . கி. தன்வேல் இ.ஆ.ப. (தற்போதைய திட்ட்க்குழு உறுப்பினர் செயலர்) அவர்களை சந்திக்கச்சென்றபோது பழைய ந்னைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்களின் தம்பி திரு . செல்வராசு அவர்கள் கூரைப்பேட்டை திறப்பு விழா அழைப்பை பொக்கிஷம்போல் காத்துவைத்திருந்தார். அந்த அழைப்பை இங்கே வெளியிடுகிறேன். அது பல செய்திகளைச்சொல்லுகிறது. 50 ஆண்டு வரலாறு சொல்லும் அழைப்பு இது.